/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் ஆவணி செவ்வாய் தரிசனம்
/
கந்தசுவாமி கோவிலில் ஆவணி செவ்வாய் தரிசனம்
ADDED : ஆக 21, 2024 09:11 AM

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நான்கு கால பூஜைகள் உட்பட, விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தினசரி பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
குறிப்பாக, செவ்வாய் கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று ஆவணி முதல் செவ்வாய் கிழமை என்பதால், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். அதேபோல், கோவில் வட்ட மண்டபத்தை சுற்றிலும், வழக்கமாக விளக்கேற்றும் இடத்திலும், ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி, கூட்டு வழிபாடு செய்தனர்.