/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினம் வளைவில் குவியாடியால் விபத்து தவிர்ப்பு
/
சதுரங்கப்பட்டினம் வளைவில் குவியாடியால் விபத்து தவிர்ப்பு
சதுரங்கப்பட்டினம் வளைவில் குவியாடியால் விபத்து தவிர்ப்பு
சதுரங்கப்பட்டினம் வளைவில் குவியாடியால் விபத்து தவிர்ப்பு
ADDED : மே 06, 2024 12:08 AM

சதுரங்கப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், ஆரம்ப சுகாதார மையம் அருகில், பிரதான சாலையில், குறுகிய அபாய வளைவு உள்ளது.
இவ்வளைவில் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள், எதிர் திசை திருப்பத்தில் வரும் வாகனங்களை அறிய இயலாது.
பெரும்பாலான வாகனங்கள், 'ஹாரன்' ஒலிக்காமல் திரும்புகின்றன. எதிரில் வாகனங்கள் வந்தால், திடீரென வேகத்தை குறைக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அதனால், அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டன.
வளைவில் விபத்து அபாயத்தை தவிர்க்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், வளைவில் எதிர் திசையில் வரும் வாகனங்களை அறியும் வகையில், குவியாடி அமைக்கப்பட்டது.
இதையடுத்து, விபத்து தவிர்க்கப்பட்டு வருகிறது. கண்ணாடியில் படியும் துாசுக்களை நீக்கி, பராமரிக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.