/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீண்டும் சாலையை ஆக்கிரமித்த பூ மாலை வியாபாரிகளால் அவதி
/
மீண்டும் சாலையை ஆக்கிரமித்த பூ மாலை வியாபாரிகளால் அவதி
மீண்டும் சாலையை ஆக்கிரமித்த பூ மாலை வியாபாரிகளால் அவதி
மீண்டும் சாலையை ஆக்கிரமித்த பூ மாலை வியாபாரிகளால் அவதி
ADDED : ஏப் 28, 2024 01:55 AM
தாம்பரம்:தாம்பரத்தில், முடிச்சூர் சாலை வழியாக இறங்கும் மேம்பாலத்தின் கீழ் பகுதி, பூ மாலை கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறியுள்ளது. கீழ்ப்பகுதியில் இருந்த கடைகள் மெல்ல மெல்ல வெளியே வந்து, அணுகு சாலையை ஆக்கிரமித்து, சாலையிலேயே பூ மாலைகளை தொங்க விடுகின்றனர்.
அவற்றை வாங்க வருவோரும் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி, பேரம் பேசுவதாலும், வாங்குவதாலும், தினசரி நெரிசல் தொடர்கதையாக உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் போவதற்குக் கூட வழியில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மற்றொரு புறம் குடிமகன்களின் புகலிடமாகவும், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாகவும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி மாறியுள்ளது.
இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து, பூ மாலை கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பூ மாலைகளை அணுகு சாலையில் தொங்க விடக்கூடாது என்று எச்சரித்து சென்றனர்.
இதனால், ஒருநாள் மட்டும் கட்டுப்பட்ட வியாபாரிகள், நேற்று முதல் வழக்கம்போல், சாலையில் பூமாலைகளை தொங்கவிட்டு ஆக்கிரமிப்பை மீண்டும் துவக்கியுள்ளனர்.

