/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீரபோகம் சுகாதார வளாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
வீரபோகம் சுகாதார வளாகம் செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 07, 2024 05:53 AM
செய்யூர், : செய்யூர் அருகே வீரபோகம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர், திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தவிர்க்கும் விதமாக, 10 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே பொது மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
சில ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாகத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்து, சுகாதார வளாகத்தை பயன்படுத்த மகளிர் விருப்பம் காட்டவில்லை.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 1.46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், தற்போது வரை செயல்படுத்தப்படாமல் பூட்டியே கிடப்பதால், மகளிர் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.