/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீக்குதல் விழிப்புணர்வு
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீக்குதல் விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீக்குதல் விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நீக்குதல் விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2025 07:47 PM
செங்கல்பட்டு:பெண்களுக்கு எதிரான பாலின உணர்திறன் மற்றும் குற்றங்களை நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரில் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய குழு வழக்கறிஞர் டேவிட் சுந்தர் சிங் பேசுகையில்,''பாலின சமநிலை, பாலின சமத்துவம் என்பது, பெண்களை மரியாதையுடன், மாட்சிமையுடன் நடத்துவது,'' என்றார்.
தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணைய தலைவர் குமரி பேசுகையில்,''பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.