/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறிவியல் தினத்தில் விழிப்புணர்வு
/
அறிவியல் தினத்தில் விழிப்புணர்வு
ADDED : பிப் 28, 2025 11:46 PM
மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது.
பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி நேற்று, இந்திய அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனை போற்றும் விதமாக, அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
ஒளியின் அலை நீள மாற்றத்திற்கு ராமன் விளைவு என்றும், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் எனவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின், மாணவர்கள், தலைமை ஆசிரியர், வார்டு உறுப்பினர் மற்றும் ஆசிரியர்கள், சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பள்ளி வளாகத்தில் பசுமை சூழலை ஏற்படுத்தும் வகையிலும் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.