/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பி' டிவிஷன் வாலிபால் 'அக்னி நண்பர்கள்' அசத்தல்
/
'பி' டிவிஷன் வாலிபால் 'அக்னி நண்பர்கள்' அசத்தல்
ADDED : செப் 01, 2024 11:45 PM
சென்னை : தமிழ்நாடு வாலிபால் சங்கம் ஆதரவுடன், சென்னை வாலிபால் சங்கம் சார்பில், மாவட்ட அளவில் இரு பாலருக்கான 'பி - டிவிஷன்' வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடந்தன.
இதில், மகளிர் பிரிவில் ஜேப்பியார் பல்கலை வீராங்கனையர் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஆடவருக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ், சுங்கத்துறை, அக்னி நண்பர்கள், சென்னை போலீஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதியில் மோதின. இதில், அக்னி நண்பர்கள் கிளப், சுங்கத்துறை அணியினர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில், சுங்கத்துறை அணியை எதிர்த்து அக்னி நண்பர்கள் அணி களமிறங்கியது. ஆட்டத்தின் துவக்கம் முதல் தடுப்பு ஆட்டத்தில் துடிப்புடன் செயல்பட்ட அக்னி வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தையும் தரமாகச் செய்தனர். இதனால், ஆட்டத்தில் அனல் பறந்தது.
முடிவில், 25 - 22, 25 - --21, 25 - -20 என, நேர் செட்களில் சுங்கத்துறை அணியை வீழ்த்தி அக்னி வீரர்கள், 'சாம்பியன்' கோப்பையை வசமாக்கினர்.