/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
/
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
ADDED : ஜூலை 06, 2024 12:37 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன், கழிவுநீர் தேக்கமடைந்து உள்ளது. அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதாக, பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., கவுன்சிலர் சி.தங்கராசு கூறியதாவது:
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட மின் வாரிய அலுவலக பேருந்து நிறுத்தத்தில், கழிவுநீர் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
அது, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியருக்கும் இடையூறாக உள்ளது.
மின்வாரிய அலுவலகம் வரை கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால், அதற்குப்பின் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், கழிவுநீர்கால்வாய் பணிகள் நடைபெறவில்லை.
இதனால், மின் வாரிய அலுவலகத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் தேக்கம் அடைந்து, செல்ல வழி இல்லாமல் ஜி.எஸ்.டி., சாலையில் செல்கிறது.
மேலும், அது மின் வாரிய அலுவலக பேருந்து நிறுத்தம் முன் தேக்கமடைந்து, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால், பேருந்துக்காகநிற்கும் பயணியர், மிகுந்த சிரமம் அடைந்துவருகின்றனர்.
இது குறித்து, நகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கால்வாயை நீட்டித்து, கழிவுநீர் முறையாக வெளியேற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.