/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை கோவில் இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட தடை
/
திருவிடந்தை கோவில் இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட தடை
திருவிடந்தை கோவில் இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட தடை
திருவிடந்தை கோவில் இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட தடை
ADDED : பிப் 22, 2025 12:46 AM
மாமல்லபுரம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் இடத்தில், ஊராட்சி அலுவலகம் கட்டுவதை எதிர்த்து, கோவில் நிர்வாகம் தடை உத்தரவு பெற்றது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
108 திவ்ய தேசங்களில், 62வது கோவிலாக திகழ்கிறது. திருமண தடை, ராகு - கேது தோஷ பரிகார தலமாகவும் சிறப்பு பெற்றது. அதன் பழமை பாரம்பரிய அடிப்படையில், தொல்லியல் துறை இக்கோவிலை பராமரிக்கிறது.
இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ஊராட்சி நிர்வாகம், அத்துமீறி அடுத்தடுத்து கட்டடம் கட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் நிலையில் கோவில் நிர்வாகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமாக, புல எண் 382/10ல், ஒரு ஏக்கர் நிலம், கிராமநத்தம் வகைப்பாட்டுடன் உள்ளது.
இங்கு சவுக்கு பயிரிட குத்தகைக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை, எங்களிடம் உள்ளன.
கடந்த 2008ல், ஊராட்சி நிர்வாகம் அத்துமீறி நுாலகம் கட்டியது. அப்போதே நிலத்தின் உரிமையை நிரூபிக்க, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, நிலுவையில் உள்ளது.
தற்போதும் அத்துமீறி, ஊராட்சி அலுவலகம் கட்டப்படுவதால், அதற்கு தடை உத்தரவு பெற்றுஉள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

