/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு நிலத்தில் பூங்கா அமைக்க பூமி பூஜை
/
அரசு நிலத்தில் பூங்கா அமைக்க பூமி பூஜை
ADDED : மார் 07, 2025 09:57 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டம், புதுப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண் 63/4ல், 39.50 சென்ட் அரசு நிலம், தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு, அந்த தனி நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வருவாய்த்துறை சார்பில், சம்பந்தப்பட்ட சர்வே எண் இடம், கிராம கணக்குகளில் அரசு புறம்போக்கு, விளையாடும் இடம் என உள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு, விளையாட்டு இடம் என கிராம கணக்கில் இருப்பதால், பட்டா வழங்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்தது.
செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின்படி வருவாய்த் துறை மேற்பார்வையில், புதுப்பாக்கம் ஊராட்சியினர் மேற்கண்ட இடத்தை மீட்டு,'அரசுக்கு சொந்தமான இடம்' என, சில நாட்களுக்கு முன் அறிவிப்பு பலகை வைத்தனர்.
மேற்கண்ட இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கான பூமி பூஜை, ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமையில், புதுப்பாக்கத்தில் நேற்று நடந்தது.