/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை குடிநீர் தொட்டி கட்டுமான பூமிபூஜை
/
திருவிடந்தை குடிநீர் தொட்டி கட்டுமான பூமிபூஜை
ADDED : ஜூலை 12, 2024 10:05 PM
மாமல்லபுரம்: திருவிடந்தையில், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பூமிபூஜை நடந்தது.
மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தை ஊராட்சிப் பகுதியில், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே, குடிநீர் விநியோகத்திற்காக, கூடுதல் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க, பொதுமக்கள் வலியுறுத்தினர். ஊராட்சி நிர்வாகம், 27.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், இத்தொட்டி கட்ட முடிவெடுத்தது.
திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், நேற்று கட்டுமானப் பணியை, பூமிபூஜையுடன் துவக்கினார். ஊராட்சித் தலைவர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்ச்சை@@
புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் முகப்பு பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை ரங்கநாதர் குளத்தின் கரையில் கட்டப்படுகிறது. தொல்லியல் துறை விதிமுறைகளின்படி, தொல்லியல் சின்னம் அருகில், எவ்வித கட்டுமானமும் கட்டக்கூடாது என்பது விதி. இங்கு விதியை மீறி கட்டுவதாக, சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.