/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக் நிலைதடுமாறி விபத்து ;வண்டலுாரில் வாலிபர் பலி
/
பைக் நிலைதடுமாறி விபத்து ;வண்டலுாரில் வாலிபர் பலி
ADDED : ஆக 20, 2024 05:36 AM
கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி, கொளப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யப்பன், 22. இவரின் நண்பர் கந்தவேல், 28.
இருவரும், வண்டலுாரில் உள்ள ஹோண்டா இருசக்கர வாகன ஷோரூமில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கந்தவேல் மற்றும் அய்யப்பன் இருவரும், இருசக்கர வாகனத்தில் வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நிலைதடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. அதில், இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தனர்.
அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கந்தவேல் லேசான காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

