/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்காரு அடிகளார் பிறந்த நாள்; செங்கையில் நலத்திட்ட உதவி
/
பங்காரு அடிகளார் பிறந்த நாள்; செங்கையில் நலத்திட்ட உதவி
பங்காரு அடிகளார் பிறந்த நாள்; செங்கையில் நலத்திட்ட உதவி
பங்காரு அடிகளார் பிறந்த நாள்; செங்கையில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 30, 2024 11:02 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு அடிகளார் 84வது பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நிர்வாகக்குழு தலைவர் வேலு தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.
இந்த விழாவில், நகரசபை தலைவர் தேன்மொழி, சென்னை சிறுசேமிப்புத்துறை இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், 13 தையல் இயந்திரம், 15 சலவைபெட்டி, 20 கைதெளிப்பான், ஆண், பெண் ஆகியோருக்கு 35 மிதிவண்டி, 65 பேருக்கு விவசாய கருவிகள் வழங்கப்பட்டன.
அதோடு, செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 185 பேருக்கு, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட 348 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.