/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் பா.ஜ.,வினர் விழிப்புணர்வு
/
மாமல்லையில் பா.ஜ.,வினர் விழிப்புணர்வு
ADDED : மார் 06, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், மும்மொழி பயிற்றுவிப்பு முறையும் உள்ளதால், தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் சம கல்வி எங்கள் உரிமை என, கையொப்ப இயக்கத்தை, பா.ஜ.,வினர் துவக்கியுள்ளனர்.
மாமல்லபுரம் பா.ஜ.,வினர், கடைக்காரர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர், பேருந்து பயணியர் உள்ளிட்டோரிடம், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கையொப்பம் பெற்றனர். வரும் 31ம் தேதி வரை, கையொப்பம் பெறுகின்றனர்.