/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை வளைவில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
/
சாலை வளைவில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி
ADDED : ஆக 09, 2024 01:59 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில் இருந்து திருமுக்காடு, திம்மாபுரம் வழியாக எலப்பாக்கம், உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திம்மாபுரம் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கலங்கள் வழியாக உபரிநீர் செல்லும் கால்வாய், நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது. இந்த கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மீது இரும்பு தடுப்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் தடுப்பு இன்றி திறந்தவெளியில் உள்ளது. இதன் காரணமாக, இச்சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலை வளைவு பகுதியில், இரண்டு பக்கமும் மழையில் துருப்பிடிக்காத இரும்பு தடுப்பு கம்பிகள், அச்சிறுபாக்கத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் அமைக்கப்பட்டது.