/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ப்ளூ ஸ்கை கிரிக்கெட் ராயல் அணி அபார வெற்றி
/
ப்ளூ ஸ்கை கிரிக்கெட் ராயல் அணி அபார வெற்றி
ADDED : ஜூலை 31, 2024 11:40 PM
சென்னை : சென்னையில் இயங்கி வரும் ப்ளூ ஸ்கை கிரிக்கெட்அகாடமி சார்பில், குரு ராகவேந்திரா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 20 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில், ஒன்பது அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஒவ்வொரு அணியும்மற்ற அணியுடன், தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில், சென்னை முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்த ஒரு லீக் போட்டியில், ராயல் கிரிக்கெட் அணியுடன், சேலஞ்சர்ஸ் லெவன் அணி மோதியது.
'டாஸ்' வென்று முதலில்களமிறங்கிய ராயல் அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் சின்ன தங்ககுமார் வலுவான அடித்தளம் அமைத்தார். எதிரணியின் பந்துகளை பாரபட்சமின்றி எல்லைக் கோட்டிற்கு வெளியே அனுப்பிய இவர், 19 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட, 67 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், ராயல் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 224 ரன்களைக் குவித்தது.
பின், சவாலான இலக்குடன் களமிறங்கிய சேலஞ்சர்ஸ் அணி, 16.5 ஓவரில், 126 ரன்களில் ஆட்டமிழக்க, ராயல் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக, சின்ன தங்ககுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.