ADDED : மே 25, 2024 11:40 PM

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், திருமால்பூர் -- அரக்கோணம் ரயில்வே தண்டவாளத்தில், மஞ்சம்பட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் உடலின் அருகில் இருந்த மொபைல்போன் வாயிலாக விசாரித்தனா.
இதில், அரக்கோணம் அடுத்த பொய்கைபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகன் தட்சணாமூர்த்தி, 26, என தெரிய வந்தது. இவர், தண்டாவளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்தி வருவதாக செங்கல்பட்டு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தட்ணாமூர்த்தியின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.