/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்திக்குத்து காயத்துடன் கொத்தனார் உடல் மீட்பு
/
கத்திக்குத்து காயத்துடன் கொத்தனார் உடல் மீட்பு
ADDED : ஜூலை 15, 2024 04:36 AM
கூடுவாஞ்சேரி, : வீட்டின் மாடியில் மது அருந்தியவர், கத்தியால் குத்தப்பட்டு, ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி வேண்டவரசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 40; கொத்தனார்.
இவரது அதீத குடிப்பழக்கம் காரணமாக, இவரது மனைவி மற்றும் குழந்தைகள், வேறு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வேலைக்கு சென்று வீடு திரும்பிய துரை, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில், கத்தியால் குத்தப்பட்டு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக, அருகில் இருந்தோர் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.
கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் துரையின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.