/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு
/
கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு
ADDED : ஏப் 17, 2024 09:48 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட குன்றுக்காடு பகுதியில்உள்ள கல் குவாரி குட்டையில், சடலம் ஒன்று மிதப்பதாக, கேளம்பாக்கம் போலீசாருக்குதகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற கேளம்பாக்கம் போலீசார் மற்றும் சிறுசேரி தீயணைப்பு துறையினர், கல் குவாரி குட்டையில் மிதந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் திருச்சியை சேர்ந்த பாலா, 22, என்பவர், கடந்த 15ம் தேதி காலை 7:30 மணியளவில், திருச்சி வீட்டிலிருந்து புறப்பட்டு கோவளம் தனியார் ஹோட்டல் வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்தார்.
தொடர்ந்து, 16ம் தேதி ஹோட்டல் வேலைக்கான நேர்முகத்தேர்வு முடித்து, மதியம் 2:15 மணியளவில் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசினார். பின், தொலைபேசி சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. பின், தொடர்புகொள்ள முடியவில்லை.
காணாமல் போன பாலாவை கண்டுபிடித்து தருமாறு, நேற்று முன்தினம் பாலாவின்உறவினர் ஆகாஷ், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று குன்றுக்காடு குல் குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது, காணாமல் போன பாலா என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலா கல் குவாரி குட்டையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என, பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

