/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 வயது சிறுமிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
/
5 வயது சிறுமிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 27, 2024 12:14 AM
கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டையை சேர்ந்த 5 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள மாநகராட்சிபள்ளியில் எல்.கே.ஜி.,படிக்கிறார்.
சிறுமியின் தந்தையின் நண்பரான கொருக்குப்பேட்டை, பாரதி நகர், ஏழாவது குறுக்கு தெருவைச்சேர்ந்த கரண், 27,என்பவர், நேற்று குழந்தை யுடன் அவரது வீட்டில் விளையாடி உள்ளார். அப்போது யாரும் இல்லா ததால், குழந்தைக்குபாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை அக்கம்பக்கத் தினர் பார்த்து, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார்வழக்கு பதிந்து, 'போக்சோ' சட்டத்தில் கரணை கைது செய்தனர்.