/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகனம் மோதி விபத்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
/
சரக்கு வாகனம் மோதி விபத்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
சரக்கு வாகனம் மோதி விபத்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
சரக்கு வாகனம் மோதி விபத்து விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஆக 23, 2024 02:12 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் மகன் சிவகார்த்திகேயன், 10. செங்கல்பட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சிவகார்த்திகேயன் வீட்டின் அருகே, பழைய ஜி.எஸ்.டி., சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக செங்கல்பட்டு நோக்கி வந்த 'எய்ச்சர்' சரக்கு வாகனம் சிறுவன் மீது மோதியது.
இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், ஓட்டுனரை தேடி வந்த நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு சிறுவனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓட்டுனரை கைது செய்யக்கோரி பழைய ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள கலெக்டர் மாளிகை நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
விசாரணையில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரான அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்த கணபதி, 44, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.