/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படித்த பள்ளியிலேயே திருடிய சிறுவர்கள் கைது
/
படித்த பள்ளியிலேயே திருடிய சிறுவர்கள் கைது
ADDED : மார் 01, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளியில், கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, பள்ளி வளாகத்தில், 'சென்ட்ரிங் இரும்பு பலகைகள்' அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளியில், இரவு காவலாளி இல்லை. சில தினங்களுக்கு முன் இரவில் 5 சென்ட்ரிங் இரும்பு பலகைகள் திருடப்பட்டன. பள்ளி நிர்வாகம், செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தது. கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, 15 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள், அதே பள்ளியில், 5ம் வகுப்பு படித்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.