ADDED : செப் 04, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம்:பழைய பல்லாவரம், யூனியன் கார்ப்பரேட் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 78; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்.
கடந்த மாதம் 21ம் தேதி, வீட்டை பூட்டி, மனைவியுடன் அதே பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை உடைத்து, 60,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.