/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் நிழற்குடை ஆப்பூரில் திறப்பு
/
பஸ் நிழற்குடை ஆப்பூரில் திறப்பு
ADDED : மார் 01, 2025 11:33 PM
மறைமலைநகர் :காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில் '82சி' பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன் ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இந்த பகுதியில் சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன.
பேருந்து நிறுத்தங்களில் இருபுறமும் பேருந்து நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஆப்பூர் பேருந்து நிறுத்தத்தில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று காலை, ஆப்பூர் ஊராட்சி தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு எம்.எல்.ஏ., பங்கேற்று, பேருந்து நிழற்குடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.