sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

/

பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

பறவைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்களுக்கு அழைப்பு


ADDED : மார் 10, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம், வனத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாநிலம் முழுதும், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில், வரும் 15, 16ல் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன.

செங்கல்பட்டு வனக்கோட்டம் வாயிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பிற்கு 16 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இக்கணக்கெடுப்பு பணியானது காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

விருப்பமும், ஆர்வமும் உள்ள தன்னார்வலர்கள், இப்பணியில் கலந்து கொள்ளலாம்.

பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் பங்கேற்க உள்ள தன்னார்வலர்கள், மதுராந்தகம் வனச்சரக அலுவலகம்- 86818 17272, திருப்போரூர் வனச்சரகம் 87548 47222, செங்கல்பட்டு வனச்சரகம்- 75020 94782 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும், வனத்துறை வாயிலாக பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us