/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
/
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
ADDED : செப் 05, 2024 01:20 AM
செங்கல்பட்டு:நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற, இம்மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டு துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றிகளை பெற்று, நலிந்த நிலையிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, மாதம் 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும். 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
முதியோருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. விண்ணப்பங்கள், www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், இம்மாதம் 30ம் தேதி மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 74017 03461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.