/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இ.சி.ஆர்., சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
/
இ.சி.ஆர்., சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : பிப் 27, 2025 12:10 AM

மாமல்லபுரம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற கார், தீப்பற்றி எரிந்தது.
மாமல்லபுரம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆதித்யா, 36; டாக்டர். இவர், நேற்று முன்தினம் காரில் சென்னை வந்து, பின் மாமல்லபுரம் வந்தார். நேற்று காலை, மாமல்லபுரத்திலிருந்து சென்னைக்கு சென்றார்.
மாமல்லபுரம் அடுத்த, இளந்தோப்பு பகுதியில், 7:00 மணியளவில் கடந்த போது, காரில் இருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அவர், சாலையோரம் காரை நிறுத்தி இறங்கினார்.
அப்போது, கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்த தகவலின்படி வந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.