/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ்காரரை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
/
போலீஸ்காரரை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2024 09:40 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில், நேற்று அதிகாலை செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீஸ்காரர் அஜித்குமார், 25, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.
சார் - பதிவாளர் அலுவலகம் அருகில், இரண்டு நபர்கள் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டு இருந்தனர். போலீஸ்காரர் அஜித்குமார் அவர்களை தடுக்க முயன்றபோது, அவர்கள் அருகில் இருந்த கட்டையை எடுத்து, அஜித்குமாரை தாக்கினர்.
இது குறித்து, அஜித்குமார் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், போலீஸ்காரரை தாக்கிய இருவரும், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரபிக் தஸ்தகீர், 27, அவரது தம்பி ஹாஜி பாஷா, 20, என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.