/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
/
காவலரை தாக்கிய ஓட்டுனர் மீது வழக்கு
ADDED : ஜூலை 11, 2024 12:35 AM
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 41. செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் காவலராக பணியில் உள்ளார். செங்கல்பட்டில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை காவலர் குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் அருண்குமார் சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு மேட்டுத்தெரு விநாயகர் கோவில் அருகே, போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆட்டோவில் இருந்தவரிடம் கேட்ட போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த நபர் அருண்குமாரை தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்கு பதிந்த, செங்கல்பட்டு நகர போலீசார், ஆட்டோ ஓட்டுனர் ஜலாவுதீன், 38, என்பவரை தேடி வருகின்றனர்.