/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்களை கேலி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
/
பெண்களை கேலி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மே 28, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய குன்னப்பட்டு ஊராட்சியை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர், நேற்று முன்தினம், தன் மகள்களுடன் இருசக்கர வாகனத்தில், குன்னப்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஜய், 19, சுப்பிரமணி, 22, நவீன், 25, ஆகிய மூவரும், இளம்பெண்களை மடக்கி, காதலிப்பதாகவும், காதலிக்கச் சொல்லியும்மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பெண் மானாமதி போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் அந்த மூவர் மீதும் வழக்குபதிவு செய்துவிசாரிக்கின்றனர்.