/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்பு பராமரிப்பில் அசத்திய நலச்சங்கங்களுக்கு பணப்பரிசு
/
குடியிருப்பு பராமரிப்பில் அசத்திய நலச்சங்கங்களுக்கு பணப்பரிசு
குடியிருப்பு பராமரிப்பில் அசத்திய நலச்சங்கங்களுக்கு பணப்பரிசு
குடியிருப்பு பராமரிப்பில் அசத்திய நலச்சங்கங்களுக்கு பணப்பரிசு
ADDED : ஜூலை 28, 2024 11:33 PM
சென்னை : பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
பெரும்பாக்கத்தில் எட்டு மாடி உடைய 186 பிளாக்குகள் உள்ளன. இதில், 55 பிளாக்குகளில் 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டத்தில், நலச்சங்கங்கள் துவங்கப்பட்டு உள்ளன.
பிளாக்குகளை சிறப்பாக சீரமைத்து, வரவு - செலவு கணக்குகளை முறையாக பராமரித்த சங்கங்களை தேர்வு செய்து கவுரவிக்க, வாரியம் முடிவு செய்தது.
மேலும், மண்டலம் வாரியாக மூன்று சங்கங்களை தேர்வு செய்து, ஒரு லட்சம், 50,000 மற்றும் 25,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கிழக்கு மண்டலம், பெரும்பாக்கம், 'நம்மால் முடியும்' பிளாக் முதல் பரிசும், 'இணையும் கைகள்' பிளாக், 2ம் பரிசும், 'அறம்' பிளாக் 3ம் பரிசும் பெற்றது.
வடக்கு மண்டலம், அத்திப்பட்டு, கக்கன்ஜிநகர் குடியிருப்போர் நலச்சங்கம், முதல் பரிசு, தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் குடியிருப்போர் நலச்சங்கம் 2ம் பரிசும், மணலி ரெயின்போ குடியிருப்போர் நலச்சங்கம் 3ம் பரிசும் பெற்றது.
பெரும்பாக்கத்தில் உள்ள 19 இளைஞர் மன்றங்களுக்கு, தலா, 10,000 ரூபாய் மதிப்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புதிதாக துவங்கிய, எட்டு சங்கங்களுக்கு, முன் இணை மானியமாக தலா 52 லட்சம் வழங்கப்பட்டது. ஒன்பது பேருக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2015ம் ஆண்டு வெள்ள பாதிப்பின்போது, கூவம் பகுதியில் வசித்த, 810 பேருக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கி, பெரும்பாக்கத்தில் வீடு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீடு ஆணை வழங்க, கைரேகை பதிவு செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் வைத்திருந்த, 440 குடும்பங்களுக்கு, நிரந்தர ஒதுக்கீடு ஆணை மற்றும் தலா 35,000 ரூபாய் வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.