/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'
/
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உடைந்து தொங்கும் 'சிசிடிவி'
ADDED : ஜூன் 28, 2024 01:56 AM

திருப்போரூர்:திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றியம், மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, வட்டார கல்வி வள மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் உள்ளிட்டஅலுவலகங்கள் உள்ளன.
மேலும், சிமென்ட் சேமி ப்பு கிடங்கு, தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் கட்டுமான கம்பி கிடங்கு ஆகியவையும் அமைந்துள்ளன.
வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இங்கு, தினசரி பல்வேறு வேலைகளுக்காக, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேற்கண்ட சிமென்ட் மற்றும் கம்பி அடுக்கி வைக்கப்படும் கிடங்கு பகுதியில், பாதுகாப்புகருதியும், திருட்டுஉள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையிலும், கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில், ஒரு கேமரா உடைந்து தலை தொங்கியநிலையில் உள்ளது.அதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்றச்சம்பவம் நடந்தால், குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, தலைதொங்கிய நிலையில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.