/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூண்டி ஊராட்சி பகுதிகளில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிப்பு
/
செம்பூண்டி ஊராட்சி பகுதிகளில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிப்பு
செம்பூண்டி ஊராட்சி பகுதிகளில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிப்பு
செம்பூண்டி ஊராட்சி பகுதிகளில் 'சிசிடிவி' பொருத்தி கண்காணிப்பு
ADDED : ஆக 16, 2024 11:46 PM

அச்சிறுபாக்கம் : சோத்துப்பாக்கத்திலிருந்து- எல்.எண்டத்துார் வழியாக, உத்திரமேரூர், காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம், செம்பூண்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
செம்பூண்டியிலிருந்து மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி சாலைகள் என, நான்கு பக்கமும் சாலை வசதிகளைக் கொண்டது.
இந்த சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலைகளில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில், போலீசாருக்கு சிக்கல் இருந்து வந்தது.
அதுமட்டுமின்றி, கிளியாற்றில் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவதிலும் சிக்கல் நீடித்தது. மேலும், குடியிருப்புகளில் நகை திருட்டு, கால்நடைகள் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
அதனால், விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை அடையாளம் காண, அப்பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நேற்று, மதுராந்தகம் டி.எஸ்.பி., சிவசக்தி, மேல்மருவத்துார் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தனர்.
ஊராட்சி தலைவர் ஏற்பாட்டில், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில், மொத்தம் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களின் பதிவுகளை, ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

