/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் எஸ்.ஆர்.எம்.,மில் கொண்டாட்டம்
/
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் எஸ்.ஆர்.எம்.,மில் கொண்டாட்டம்
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் எஸ்.ஆர்.எம்.,மில் கொண்டாட்டம்
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் எஸ்.ஆர்.எம்.,மில் கொண்டாட்டம்
ADDED : மே 09, 2024 01:03 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் அறிவியல் நிறுவனத்தில், உலக அறிவுசார் சொத்துரிமை தினம், நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை, எஸ்.ஆர்.எம்., தொழில் முனைவு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குனரகம் ஏற்பாடு செய்து இருந்தது.
துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, கே.வி.சத்குரு, மேலாண்மை ஆலோசகர்களின் துணை தலைவர் சத்யநாராயணா, வணிக தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், 2023- - 24 கல்வியாண்டில் காப்புரிமை பெற்ற 197 கண்டுபிடிப்பாளர்களுக்கு பாராட்டு கடிதங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், 890 இந்திய காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டன. 820 இந்திய காப்புரிமைகள் வெளியிடப்பட்டன. 334 காப்புரிமைகள் வழங்கப்பட்டன.
கடந்த நிதியாண்டில், 253 காப்புரிமைகள் வழங்கப்பட்டன. 30 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 27 காப்புரிமைகள் வழங்கப்பட்டன.