/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குருவன்மேடு அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
குருவன்மேடு அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : மார் 15, 2025 01:51 AM

சிங்கபெருமாள் கோவில்,:-காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குருவன்மேடு கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் போர்சியா வரவேற்புரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியை சுதா ஆண்டறிக்கை வாசித்தார்.
காட்டாங்கொளத்துார் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் அலமேலு முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவ -- மாணவியர், பெண் கல்வி குறித்தும், கல்வியின் அவசியம் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துக் கூறினர்.
கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ -- மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.