/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழிப்பாந்தண்டலம் பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
குழிப்பாந்தண்டலம் பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : மார் 08, 2025 11:22 PM

மாமல்லபுரம், குழிப்பாந்தண்டலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி, கடந்த 1910ல் துவக்கப்பட்டது.
தற்போது 125 ஆண்டு கள் கடந்த நிலையில், நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
வட்டார கல்விஅலுவலர் சுரேஷ்பாபு தலைமையில் நடந்த விழாவில், அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
தலைமையாசிரியர் யசோதா, ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள்கவுரவிக்கப்பட்டனர்.
மாணவ - மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். இவர்களுக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளும் நடப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஷ், ஊராட்சித் தலைவர் சுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.