/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேவை இல்லத்தில் பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்
/
சேவை இல்லத்தில் பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 09, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின், நான் முதல்வன் திட்டம் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானடோரியத்தில், அரசு சேவை இல்லம் இயங்குகிறது.
இங்கு உயர்கல்வி பயிலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்களுக்கு, பைலட் ட்ரைனிங் ப்ரோக்ராம் எனும் கணினி திறன் பயற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் பங்கேற்ற 25 பேருக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை, கலெக்டர் அருண்ராஜ், தாம்பரத்தில் நேற்று முன்தினம் வழங்கினார்.
உடன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.