/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்
/
செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூன் 15, 2024 12:26 AM

செங்கல்பட்டு:சென்னை சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க உறுப்பினர் கவுதம், கடந்த 12ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதை கண்டித்து, செங்கல்பட்டு அனைத்து நீதிமன்ற வழக்கறிஞர்களும், நேற்று காலை, ஒருநாள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் எதிரே, செங்கல்பட்டு -- திண்டிவனம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, வழக்கறிஞர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
சாலை மறியல் காரணமாக, செங்கல்பட்டு -- திண்டிவனம் சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.