/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்னை பக்தர்கள் நடைபயணம்
/
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்னை பக்தர்கள் நடைபயணம்
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்னை பக்தர்கள் நடைபயணம்
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்னை பக்தர்கள் நடைபயணம்
ADDED : ஆக 20, 2024 10:29 PM

கூடுவாஞ்சேரி:நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில், வரும் 29ம் தேதி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்க உள்ளது.
அதை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், நடை பயணமாக செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவில், ஆட்டோ ஒன்றில் வேளாங்கண்ணி மாதா அலங்கரிக்கப்பட்டு, சென்னை மாதவரத்தில் இருந்து பக்தர்கள் நடைபயணம் வந்தனர்.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் வந்தபோது, ஆட்டோவில் பழுது ஏற்பட்டதால், அங்கேயே நிறுத்தி பழுது பார்த்தனர். பழுது சரிசெய்யப்பட்டு, நேற்று காலை புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து, வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூறியதாவது:
நாங்கள், சென்னையில் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றோம். கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி ஓய்வெடுத்து, அதன் பின் நடைபயணத்தை துவங்கி, வேளாங்கண்ணிக்கு சென்று விடுவோம். அங்கு, 29ம் தேதி நடைபெறும் கொடியேற்ற விழாவில் பங்கேற்று, பின் சென்னை திரும்ப இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.