/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாய் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
/
மழைநீர் வடிகால்வாய் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 12, 2024 11:46 PM
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
இதில், முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், 30 கோடி ரூபாய் மதிப்பில் திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பணிகளின் விபரங்களை கேட்டறிந்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில், கண்காணிப்பு பொறியாளர் தனசேகர், செங்கல்பட்டு உதவி செயற்பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் அரவிந்த் உட்பட துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.