/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
/
4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
ADDED : மார் 10, 2025 11:41 PM
குன்றத்துார், குன்றத்துார் அருகே மணிமங்கலம், 'மருதம் ப்ரீஸ்' அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலகுமரன், 40. இவர், ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா, 35.
தம்பதிக்கு, ஆருத்ரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் காய வைத்த துணியை எடுக்க குழந்தை ஆருத்ராவுடன், வித்யா மாலை சென்றார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மாடி படிக்கட்டு கைப்பிடி கம்பி வழியே, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தது.
அக்கம்பக்கத்தவர்கள் குழந்தையை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.