/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னசேக்காடு அரசு பள்ளி ஹாக்கியில் முதலிடம்
/
சின்னசேக்காடு அரசு பள்ளி ஹாக்கியில் முதலிடம்
ADDED : செப் 03, 2024 04:55 AM

மணலி : போரூர் ஒமேகா சர்வதேச பள்ளி சார்பில், பள்ளி அணிகளுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன.
'லீக்' அடிப்படையில் நடந்த போட்டியில், சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் அணியினர், 12 புள்ளிகள் பெற்று, தரவரிசையில் முதலிடம் பிடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றனர்.
இரண்டாவது இடத்தை, 6 புள்ளிகளுடன் போரூர் ஒமேகா சர்வதேசப் பள்ளி அணியும், மூன்றாவது இடத்தை 5 புள்ளிகளுடன் அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., அணியும் வென்றன.
சாம்பியன் கோப்பை வென்ற சின்னசேக்காடு அரசு பள்ளிக்காக, அதிக கோல்கள் அடித்து அசத்திய 6ம் வகுப்பு மாணவர் யுவன்ராஜ் சுபா, நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல் கீப்பரான, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சையது மூசா, சிறந்த கோல் கீப்பருக்கான பரிசை கைப்பற்றினார்.
கோப்பை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியை உஷா மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் லுாயிஸ் ஆகியோர் வாழ்த்தினர்.