/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
/
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஏப் 17, 2024 10:51 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்றது ஸ்தலசயன பெருமாள் கோவில். 108 வைணவ திவ்விய தேச கோவில்களில், 63வதாகவும், நில தோஷ பரிகாரத்திற்கும் சிறப்பு பெற்றது.
இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, சித்திரை பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்தவில்லை. மஹா கும்பாபிஷேகம், கடந்த பிப்., 1ம் தேதி நடந்ததைத் தொடர்ந்து, மீண்டும் உற்சவங்கள் துவக்கப்பட்டன.
சித்திரை பிரம்மோற்சவம், கொடியேற்றி துவக்கப்பட்டது. காலை 3:30 மணிக்கு நடைதிறந்து, நித்ய பூஜைநடத்தினர்.
பின், அலங்கார சுவாமி, தேவியருடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அவர் முன்னிலையில், நாலாயிர திவ்விய பிரபந்த, முதல் திருவந்தாதி பாடல்கள் பாடி, ஆகம வேத மந்திரங்கள் முழங்கி, பேரி தாளம் இசைத்து, தேவர்கள், தேவதைகளை வரவேற்று, 5:40 மணிக்கு கொடியேற்றினர்.
தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் நவசந்தி பூஜை நடத்தி, சுவாமி கோவிலிலிருந்து புறப்பட்டு, வீதியுலா சென்றார். இரவு கிருஷ்ணர் அலங்கார சுவாமி, ஊஞ்சல் சேவையாற்றினார். பக்தர்கள்தரிசித்து வழிபட்டனர்.
ஐந்தாம் நாள் உற்சவமாக, வரும் 21ம் தேதி கருடசேவை, ஏழாம் நாள் உற்சவமாக, வரும் 23ம் தேதி திருத்தேரில் சுவாமி உலா ஆகியவை, முக்கிய உற்சவங்களாக நடக்கின்றன.

