/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஐ.டி., ஊழியர் உயிரை பறித்தது சிகரெட்
/
ஐ.டி., ஊழியர் உயிரை பறித்தது சிகரெட்
ADDED : மார் 10, 2025 11:41 PM
சென்னை, திருவண்ணாமலை மாவட்டம், கடம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் நேதாஜி, 34. திருமணமாகதவர். இவர், இரண்டு ஆண்டுகளாக, சென்னை, சாலிகிராமம், விஜயராகவபுரம் பகுதியில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் குடியிருந்த வீட்டில் இருந்து, நேற்று அதிகாலை அதிகளவில் புகை வந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள மெத்தை எரிந்த நிலையில், அருகே மயங்கிய நிலையில் நேதாஜி கிடந்துள்ளார்.
தகவலறிந்து '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்தனர். அவர்கள் பரிசோதித்த போது, வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது.
கே.கே.நகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று மது போதையில் சிகரெட் பற்ற வைத்த போது, மெத்தையில் தீப்பிடித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட புகையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேதாஜி உயிர்இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.