/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லைக்கு 'சர்க்கிள்' பஸ் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
மாமல்லைக்கு 'சர்க்கிள்' பஸ் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
மாமல்லைக்கு 'சர்க்கிள்' பஸ் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
மாமல்லைக்கு 'சர்க்கிள்' பஸ் சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2024 10:49 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, சுற்றுலா பயணியர்வருகின்றனர்.
இப்பகுதியினரும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.
சுற்றுலா பயணியர்மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்காக, அரசு பேருந்துகள் இயக்க வேண்டியதுஅவசியம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, கல்பாக்கம் - சென்னை இடையே, மால்லபுரம் வழியில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய தடங்களில், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாமல்லபுரம் -சென்னை இடையே,செங்கல்பட்டு வழியிலும் இயக்கப்பட்டது.
இந்த பேருந்துகள், பல ஆண்டுகளுக்கு முன்நிறுத்தப்பட்டன. தற்போது,சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது.
இப்பகுதியினர் அதிக அளவில் வெளியூர் சென்று திரும்புகின்றனர்.
மாமல்லபுரத்திலிருந்து, செங்கல்பட்டு, கிளாம்பாக்கம், தாம்பரம், கேளம்பாக்கம், கோவளம் ஆகிய பகுதிகள் வழியாக, மீண்டும் மாமல்லபுரம் செல்வதற்கான பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
அதேபோல், மாமல்லபுரத்திலிருந்து, கோவளம், கேளம்பாக்கம், தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு வழியாக, மீண்டும் மாமல்லபுரம் செல்வதற்கும் முறையான பேருந்து வசதி இல்லை.
எனவே, எதிரெதிர்தடங்களில் சர்க்கிள் பேருந்து இயக்கினால், பயணியர் பயன்பெறுவர்.
அரசு போக்குவரத்துக் கழகம், சர்க்கிள் பேருந்து சேவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர்வலியுறுத்துகின்றனர்.