/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் அரசு இடம் ஆக்கிரமிப்பால் மோதல்
/
திருப்போரூரில் அரசு இடம் ஆக்கிரமிப்பால் மோதல்
ADDED : மே 03, 2024 01:12 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலை, அண்ணா நகர் சாலையை ஒட்டி தனிநபர் இடம் உள்ளது. அந்த இடத்தை ஒட்டி அரசு நிலமும் உள்ளது.
நேற்று தனிநபர், மேற்கண்ட இடத்தில் ரெடிமெட் சுற்றுச்சுவர் அமைத்துக்கொண்டிருந்தார். இதையறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், அரசு நிலத்திலும் சுற்றுச்சுவர் அமைப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனே, தண்டலம் வி.ஏ.ஓ., திருப்போரூர் வருவாய் ஆய்வாளர், தண்டலம் ஊராட்சி செயலருக்கு மொபைல் போன் வாயிலாக புகார் தெரிவித்தார்.
வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை ஆய்வு செய்தனர். நில அளவையர் வாயிலாக, இடத்தை அளவீடு செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சமூக ஆர்வலருக்கும், தனிநபர் இடம் சார்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், அனைவரையும் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.