/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாய்மை பணி
/
செங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாய்மை பணி
ADDED : மே 03, 2024 01:07 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில், வேதநாராயணபுரம் பகுதியில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தில், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, கூட்டுறவு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், கடந்த ஜன., 26ம் தேதியில் இருந்து இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி இருந்தது. வளாகத்தை சீரமைத்து, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் அனாமிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை அடுத்து, ஆலப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாய்மை பணி செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார்.
அதன்பின், கலெக்டர் அலுவலக வளாகம் ழுமுதும் பொக்லைன் இயந்திரம் வாயிலாக முட்செடிகள் அகற்றி, சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.