/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்சியினர் நுழைய தடை ஓட்டுச்சாவடிகளில் குறியீடு
/
கட்சியினர் நுழைய தடை ஓட்டுச்சாவடிகளில் குறியீடு
ADDED : மார் 29, 2024 11:15 PM

மாமல்லபுரம்:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
ஓட்டுப்பதிவின் போது, ஓட்டுச்சாவடி பகுதி சாலைகளில், அரசியல் கட்சி தொண்டர்கள் முகாமிடுவது வழக்கம். அவர்கள், அவ்வழியே ஓட்டளிக்க செல்லும் வாக்காளர்களிடம், ஓட்டு கேட்டு இறுதி நேர பிரசாரம் செய்வர்.
இதனால், கட்சியினர்இடையே தகராறு ஏற்பட்டு, அது மோதலாகவும் மாறும்.
இதைத் தவிர்க்க, தேர்தல் நடத்தை விதிகளின்படி, ஓட்டுச்சாவடியிலிருந்து 200 மீ., சுற்றளவு பகுதிக்குள் முகாமிடவோ, பிரசாரம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.
தற்போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 200 மீட்டருக்கு உட்பட்ட தடை விதிக்கப்பட்டபகுதியை குறிப்பிட்டு, குறியீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

