/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காபி கடையில் தீ விபத்து பெண் ஊழியர் காயம்
/
காபி கடையில் தீ விபத்து பெண் ஊழியர் காயம்
ADDED : ஆக 02, 2024 02:45 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய ஜி.எஸ்.டி., சாலையில், நகராட்சி அலுவலகம் எதிரில், முன்னா, 25,என்பவர், காபி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், சூணாம்பேடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி, 37, என்ற பெண் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடையில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி கடை முழுதும் பரவியது. இதில், புவனேஸ்வரிக்கு கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.
மேலும், மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து புவனேஸ்வரியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம், செங்கல் பட்டு நகர போலீசார்வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்டது என, தெரியவந்தது.
மேலும், இந்த கடையில், வீடுகளுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டரை பயன்படுத்தி வந்ததும், போலீஸ் விசாரணயில் தெரியவந்தது.