/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகள் விபரம் தபால் ஓட்டளிக்க சேகரிப்பு
/
மாற்றுத்திறனாளிகள் விபரம் தபால் ஓட்டளிக்க சேகரிப்பு
மாற்றுத்திறனாளிகள் விபரம் தபால் ஓட்டளிக்க சேகரிப்பு
மாற்றுத்திறனாளிகள் விபரம் தபால் ஓட்டளிக்க சேகரிப்பு
ADDED : மார் 21, 2024 08:53 AM
மாமல்லபுரம்:லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், ஏப்.,19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர், உடல்நல குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகிய வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க இயலாது.
அத்தகைய வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற, அவர்கள் தபால் ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் ஏற்பாடுசெய்துள்ளது.
இதையடுத்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவர்களை கண்டறிந்து, ஓட்டுச்சாவடியில் அல்லது தபால் ஓட்டளிக்க, அவர்களின் விருப்பம் குறித்து கேட்டறிகின்றனர்.
தபால் ஓட்டளிக்க விரும்புவோருக்கு மட்டும், தேர்தலுக்கு சிலநாட்கள் முன், தபால்ஓட்டளிக்க ஏற்பாடு செய்வதாக, ஓட்டுச்சாவடிஅலுவலர் ஒருவர்தெரிவித்தார்.